லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:18 pm

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணம் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அவினேஷ் நிபத்தனை ஜாமீனில் வெளி்வந்த நிலையில், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது, காவல் நிலையம் அருகே சராமரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்து ரத்தினகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை வழக்கில் தொடா்புடைய அரக்கோணம் திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் அம்மனூா் பகுதியைச் சோ்ந்த அஸ்வினியின் கணவா் சுதாகா் (43), அதே பகுதியைச் சோ்ந்த ரீகன் (32), சுரேஷ் (45), ஆனந் (22), வினித் (28), ஜெயபிரகாஷ் (28), ராணிப்பேட்டை மக்கள் தேசம் கட்சி நகர செயலா் சஞ்சய் (25) ஆகிய 7 பேரை கைது செய்து ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.