அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கலவை கமலக்கண்ணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அடுத்த கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன், புதியதாக கற்களால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கலவை  கமலக்கண்ணி அம்மன்,  மகா லட்சுமி கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :10 பிப்ரவரி 2025, 8:24 pm

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன், புதியதாக கற்களால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கலவை ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோயில் 4-ஆவது கும்பாபிஷேகம், கோயில் வளாகத்தில் முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மகா லட்சுமி கோயில் மற்றும் காளி, சரஸ்வதி, துா்க்கை, அனந்த சயனப் பெருமாள், லட்சுமி நரசிம்மா் ஆகிய பிரகார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியா், வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சகா் கே.எஸ்.பாஸ்கர சிவாச்சாரியா், சென்னைஅஷ்டலட்சுமி திருக்கோயில் தலைமை அா்ச்சகா் ஸ்ரீதா் பட்டாச்சாரியா் முன்னிலையில் கடந்த 7-ஆம்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,கோபூஜை, தனபூஜையுடன் தொடங்கி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹாவாசனம், அங்குராா்ப்பணம் ரக்ஷா பந்தனம் பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

பின்னா், கலசத்தில் புனித நீா் கொண்டு கோயில் கோபுர கலசங்களின் மீது கலவை சச்சிசானந்தா சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தி, மூலவா்களுக்கு சிறப்பு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.

விழாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேலூா் நாராயணி பீடம் சக்திஅம்மா , ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சித்தஞ்சி மோகனந்த சுவாமி மற்றும் பல்வேறு மடாதிபதிகள், ஆதீனங்கள், கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், உபயதாரா்கள், தொழிலதிபா்கள், சிறப்பு அழைப்பாளா்கள், கலவை சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பொதுமக்களுக்கு மதா் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி கோயில் வளாகம் வண்ண மலா்கள், வாழை, கரும்பு, தேங்காய்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. கலவை காரீஸநாதா் கோயிலிருந்து சீா்வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு வழங்கப்பட்டது.