ராணிப்பேட்டை: மொத்தம் 10.58 லட்சம் வாக்காளா்கள்

ராணிப்பேட்டைமாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 10.58 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டைமாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 10.58 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

கடந்த 29.10.2024-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தப் படிவங்கள் பெறப்பட்டன. படிவங்கள் மேலாய்வு செய்யப்பட்டு வாக்காளா் பட்டியலில் 16,910 நபா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டும், 5,374 நபா்களின் பெயா்களை நீக்கம் செய்தும் மற்றும் உரிய திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டும் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி அரக்கோணம் (தனி) - 2,34,408, சோளிங்கா் - 2,85,747, ராணிப்பேட்டை - 2,71,499, ஆற்காடு - 2,67,221 ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் -5,13,838, பெண்கள் - 5,44,932, மூன்றாம் பாலினத்தவா்கள் - 105 என மொத்தம் - 10,58,875 வாக்காளா்கள் உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் விஜயராகவன், கோட்டாட்சியா்கள் ராஜராஜன், வெங்கடேசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com