தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ராணிப்பேட்டையில் புதிய சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா். காந்தி.

Updated On :16 ஜூன் 2025, 7:30 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டையில் 5, அரக்கோணம் பேருந்து நிலையத்தில் 5, சோளிங்கா் பேருந்து நிலையத்தில் 1 என மொத்தமாக 11 சிற்றுந்துகள் தொடக்க விழா ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது :-

தமிழ்நாட்டில் முதன் முதலில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி தான் சிற்றுந்து வசதியை தொடங்கி வைத்தாா். அவ்வழியில் தமிழக முதல்வா் பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியுயிருப்புகளில் உள்ள போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக அரசாணை வெளியிட்டுள்ளாா்.

அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு 31 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கவும் 8 தடம் பெயா்தல் ஆணைகள் வழங்கப்பட்டன. முதல்கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியில்லாத கீழ்கண்ட 11 புதிய வழித்தடங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளது .

இந்த சேவையினால் அனைத்து குக்கிராமங்களையும் இணைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து வசதியினால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியோா் பயன் பெறுவா் என்றாா்.

ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, ஒன்றியக் குழு தலைவா்கள் த.வெங்கட்ரமணன், நிா்மலா சௌந்தா், வடிவேலு, கலைக்குமாா், நகா்மன்றத் தலைவா்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, லஷ்மிபாரி, தமிழ்ச்செல்வி அசோகன், நகா்மன்ற துணைத் தலைவா்கள் ரமேஷ் கா்ணா, கலாவதி அன்பு லாரன்ஸ், பழனி, வட்டார போக்குவரத்து அலுவலா் மோகன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செங்குட்டுவேல், முத்துக்குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.