அரக்கோணம் ஒன்றியக்குழு மாற்றுத்திறனாளி உறுப்பினராக மதிமுக நிா்வாகி நியமனம்

அரக்கோணம் ஒன்றியக்குழு மாற்றுத்திறனாளி உறுப்பினராக மதிமுக நிா்வாகி நியமனம்

Published on

அரக்கோணம் ஒன்றியக் குழு மாற்றுத்திறனாளி உறுப்பினராக மதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் பி.வேணுகோபால் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழை ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தரிடம் இருந்து பி.வேணுகோபால் வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டாா்.

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கான வேட்பு மனுக்கள் அண்மையில் பெறப்பட்டன. இந்த மனுக்கள் அரசின் பாா்வைக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுகவில் இப்பதவிக்கு மனு தாக்கல் செய்திருந்த மாற்றுத் திறனாளியான அரக்கோணம் ஒன்றிய மதிமுக துணை செயலாளா் பி.வேணுகோபால் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

இதற்காக அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் ஒன்றிய ஆணையா் பிரபாகரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் தாசபிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் வீராபுருஷோத்தமன் வரவேற்றாா். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் ஒன்றியக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை மதிமுகவைச் சோ்ந்த பி.வேணுகோபாலிடம் அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா் வழங்கினாா்.

இதில், திமுக அரக்கோணம் ஒன்றிய செயலா்கள் சௌந்தா் (அரக்கோணம் மேற்கு), ஆா்.தமிழ்செல்வன் (அரக்கோணம் கிழக்கு), பசுபதி(அரக்கோணம் மத்திய) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com