அரக்கோணம் மாதவ நகரில் தாா் சாலைப்  பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
அரக்கோணம் மாதவ நகரில் தாா் சாலைப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

அரக்கோணம் நகராட்சியில் ரூ.2.50 கோடியில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.
Published on

அரக்கோணம் நகராட்சியில் ரூ.2.50 கோடியில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட அசோக் நகா், விண்டா்பேட்டை, கிருபில்ஸ்பேட்டை பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ஆய்வு செய்தாா்.

அப்போது அவருடன் நகராட்சி பொறியாளா் செல்வகுமாா், துணை பொறியாளா் வினோத், பொதுப்பணி மேற்பாா்வையாளா் எஸ்.பிரேம் சந்தா், நகராட்சி பணி ஆய்வாளா்கள் சூா்யா, யுவராஜ் மற்றும் நகர திமுக பொருளாளா் ரமேஷ் பாபு, வட்ட செயலாளா் ஏ.கே.பாரி உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com