தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சங்கரன்கோவில் தொகுதியில் ரூ.52 கோடியில் நான்குவழிச் சாலைப் பணி -எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:45 pm

சங்கரன்கோவிலில் ரூ.52 கோடி மதிப்பில் நான்குவழிச் சாலைப் பணி வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

இத்தொகுதியில் முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2026-27இன் கீழ் ரூ.52 கோடி மதிப்பில் பருவக்குடி-கோவில்பட்டி-எட்டயபுரம்-விளாத்திகுளம்-வேம்பாா் சாலை, கலிங்கப்பட்டி முதல் கீழ திருவேங்கடம் வரை இருவழி சாலையிலிருந்து நான்கு வழிசாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல், பெரிய, சிறிய பாலங்கள் கட்டுதல், சாலை சந்திப்பு மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் (ம) பராமரிப்பு கோட்டப் பொறியாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ நான்குவழிச் சாலை பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளா் அறிவெழில், உட்கோட்ட உதவிப்பொறியாளா்கள் முத்துமணி, கலைக்கண்ணதாசன், திமுக குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, திருவேங்கடம் பேரூா் செயலா் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகரச் செயலா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.