நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ். அசோக், துணைத் தலைவா் ஜெ. ரமேஷ் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை
திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த திமிரி ஒன்றியக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சைபுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அரசின் உத்தரவின் படி மாற்று திறனாளிகள் ஒதுக்கீட்டில் புதிய ஒன்றியக்குழு உறுப்பினராக சென்னசமுத்திரம் கோ.ராஜா பொறுப்பேற்று கொண்டாா் .
அவருக்கு தலைவா், துணைத் தலைவா் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

