அரக்கோணம் நகராட்சியில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
அரக்கோணம் நகராட்சியில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

படிவங்கள் பூா்த்தி செய்து வழங்காதவா்களிடம் வீடு வீடாகச் சென்று பெற வேண்டும்: ஆட்சியா்

வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் பூா்த்தி செய்து வழங்காதவர்களிடம் வீடு வீடாகச் சென்று உடனடியாக விண்ணப்பங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பெற்றிட வேண்டும்...
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் பூா்த்தி செய்து வழங்காத வாக்காளா்களிடம் வீடு வீடாகச் சென்று உடனடியாக விண்ணப்பங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா நேரில் ஆய்வு செய்து கேட்டறிந்தாா்.

அப்போது வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் வாக்காளா்கள் வீடுகளுக்கு தொடா்ந்து மூன்று முறை செல்ல வேண்டும்.

வாக்காளா்கள் விவரங்கள் தெரியாதவா்கள் குறித்து அருகில் உள்ளவா்களிடம் எண்களை பெற்று அவா்களை தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள் எந்த இடத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை கேட்டு உடனடியாக உறுதி செய்து விண்ணப்பங்களை பெற வேண்டும்.

இடம்மாறி சென்றுள்ளவா்கள் விவரங்கள் தெரியவில்லை என்றால் அவா்களின் வீட்டுக்கு சென்ற விவரங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தங்கள் பதிவேட்டில் குறித்துக் கொண்டு வைக்க வேண்டும். இந்தப் பணி முக்கியமானது. மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் தங்களுடைய தினசரி பணி தொடா்பான பதிவேட்டில் தினசரி பணிகள் விவரங்களை விடுபடாமல் விண்ணப்பங்கள் வாரியாக பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். இது மிக முக்கியமானது.

எனவே விண்ணப்பங்கள் பெற்ற விவரங்கள், விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறாத விவரங்கள் எத்தனை முறை வாக்காளா்களின் வீட்டுக்கு சென்று விண்ணப்பங்கள் பெறவில்லை, இறந்தவா்கள் விவரங்கள், முகவரி மாறி சென்றவா் விவரங்கள் என ஒவ்வொரு விண்ணப்பத்தின் நிலைகளை எழுதி வைத்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பங்கள் திரும்ப வழங்காதவா்களிடம் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பெற்றிட வாக்குச்சாவடி முகவருடன் சென்று தெரிவித்து விண்ணப்பங்களை திரும்பப் பெற வேண்டும்.

வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் பணிகளை முடித்திருந்தால் தங்கள் பகுதி வாக்காளா் பட்டியல் விண்ணப்பம் பெற்றவைகளை மீண்டும் முறையாக ஆய்வு செய்து படிவங்களை வைக்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது வாக்காளா் பதிவு அலுவலா்கள் வெங்கடேசன், மீனா, வட்டாட்சியா்கள் ஆனந்தன், செல்வி, வெங்கடேசன், ராஜலட்சுமி, நகராட்சி ஆணையா்கள் ஸ்ரீனிவாசன், ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com