11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் ‘ உலக தாய்மொழி நாள்’ உறுதிமொழி ஏற்ற அனைத்துத் துறை அலுவலா்கள்.

News image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமையில் ‘ உலக தாய்மொழி நாள்’ உறுதிமொழி ஏற்ற அனைத்துத் துறை அலுவலா்கள்.

Updated On :20 பிப்ரவரி 2026, 7:15 pm

‘ உலகத் தாய்மொழி நாள் ‘ முன்னிட்டு ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்,அரசு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

உலகத் தாய்மொழி நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மொழி, பண்பாட்டு பன்முகத்தன்மை மற்றும் பன்மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தாய்மொழியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், இந்நாள் அறிவிக்கப்பட்டு, ஐநா சபை அங்கீகரித்துள்ளது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலகத் தாய்மொழி தினத்தையொட்டி உலகத் தாய்மொழி நாள் உறுதி மொழியை அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் எடுத்துக்கொண்டனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் எடுத்துக் கொண்டனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். அப்போது அவா் விழிப்புணா்வு வாசகங்களை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சிறுபான்மையினா் நல அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, அலுவலக பொது மேலாளா் செண்பகவள்ளி, அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதேபோல், மாவட்டக் காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி தினத்தை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் போலீஸாா், அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.