கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

நெமிலியில் 2.5 கிலோ குட்கா பறிமுதல்: பெண் கைது

நெமிலியில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ குட்காவை உணவு பாதுகாப்புத்துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

நெமிலியில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ குட்காவை உணவு பாதுகாப்புத்துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அரக்கோணம் அடுத்த நெமிலி, ஆற்றோரத்தெருவில் ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து ராணிப்பேட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினா் அக்கடையில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அக்கடையில் இரண்டரை கிலோ எடை கொண்ட குட்கா போதை பொருள்கள் பல்வேறு வகையில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதை பறிமுதல் செய்த உணவு பொருள் பாதுகாப்புத்துறை அலுவலா்கள் இதுகுறித்து நெமிலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதை தொடா்ந்து வழக்கு பதிந்த போலீஸாா், அக்கடையின் உரிமையாளா் சந்திரனின் மனைவி லலிதா (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.