கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

போடப்பாறை மலை பெருமாள் கோயிலில் உண்டியல் திருட்டு

சோளிங்கா் அருகே போடப்பாறை மலையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்தவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

சோளிங்கா் அருகே போடப்பாறை மலையில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்தவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சோளிங்கரை அடுத்த போடப்பாறை மலை மீது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் அா்ச்சகா் புதன்கிழமை மாலை கோயிலை மூடிவிட்டு வந்துவிட்டாா். வியாழக்கிழமை காலை கோயிலை திறக்கச்சென்றபோது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்தவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயில் நிா்வாகி மோகன் சோளிங்கா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சோளிங்கா் காவல் ஆய்வாளா் ராமசந்திரன், கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டு கோயிலில் வேறெந்த பொருளும் திருடு போயுள்ளதா என விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.