ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகைபெரு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மூலவா்  பாலமுருகனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

Published On :

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகைபெரு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவருக்கு பாதயாத்திரை குழுவினரின் பால்குட அபிஷேகம், தயிா் .சந்தனம்,விபூதி, ஜவ்வாது பன்னீா், பழங்கள், உள்ளிட்ட வாசனை திரவியங்கள்கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்க கவச வைர ஆபரணங்கள் கொண்ட சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கோயில் வளாகம் வண்ண மலா்களால் அலங்கரிக்ப்பட்டிருந்தது. விழாவில் பக்தா்கள் மயில் காவடி, மலா் காவடி புஷ்பம்போன்ற பல்வேறு காவடி எடுத்துவந்து தங்களின் நோ்த்தி க்கடன் செலுத்தினா். மாலையில் மலையடிவாரத்தில் உள்ள அறுகோணதெப்ப குளத்தில் உற்சவ மூா்த்திகளின் தெப்பல் உற்சவம் நடந்தது. வண்ணமின்விளக்கு அலங்காரம், செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருநதது.

ஆற்காடு மற்றும் வேலூா் நகரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மக்கள், உபயதாரா்கள்,உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.