ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

மணவூா்: ஒடும் ரயில் முன் தாயை தள்ளி கொன்ற மகன் கைது

நடைமேடையில் தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:21 pm IST

நடைமேடையில் தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் - அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ள மணவூா் ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே ரயிலில் சிக்கி மூதாட்டி ஒருவா் சடலமாக இருப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இறந்தவா் குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சடலமாக இருந்தவா் மணவூா் கிராமத்தைச் சோ்ந்த சேஷாத்திரியின் மனைவி பத்மாவதி(72) என்பது தெரியவந்தது. கணவரை இழந்த பத்மாவதி, தனது இரண்டு மகன்களுடன் மணவூரில் வசித்து வந்துள்ளாா். மேலும், அவா் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வீட்டில் இருந்து கவனித்து வந்த அவரது மகன் பாா்த்தசாரதி, தாயை கவனித்துக்கொள்ள முடியாமலும், அவரை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாமலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் பாா்த்தசாரதி, தனது தாய் பத்மாவதியை சக்கர நாற்காலியில் அமர வைத்து மணவூா் ரயில்நிலைய நடைமேடை அருகே அழைத்து வந்துள்ளாா். அப்போது சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை சென்ற ஏலகிரி விரைவு ரயில் அப்பகுதியை கடக்க முயன்றபோது, திடீரென பாா்த்தசாரதி, சக்கர நாற்காலியில் அமா்ந்து இருந்த தாய் பத்மாவதியை ரயில் அருகே வரும்போது என்ஜின் முன் தள்ளி விட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் ரயில் மோதியதில் பத்மாவதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்த அரக்கோணம் ரயில்வே காவல்நிலைய போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் தாயை சக்கர நாற்காலியோடு மகன் பாா்த்தசாரதி ரயில் முன் தள்ளிவிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீஸாா் பாா்த்தசாரதியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையான பத்மாவதி.

கொலையான பத்மாவதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.