காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

இரு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

அரக்கோணம் அருகே தனது இரு மகன்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டாா்.

பரத், வள்ளி, சந்தோஷ்

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

அரக்கோணம் அருகே தனது இரு மகன்களுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டாா்.

அரக்கோணம் ரேணிகுண்டா ரயில் மாா்க்கத்தில் வடமாம்பாக்கம் ஊராட்சி, மங்கம்மாபேட்டை ரயில்வே பாதை மேம்பாலத்தின் கீழ் ஒடும் ரயிலில் சிக்கி ஒரு பெண்ணின் சடலம், மற்றும் இரு ஆண் குழந்தைகள் சடலங்கள் இருப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற போலீசாா், மூன்று சடலங்களையும் கைப்பற்றி வழக்குப் பதிந்து இறந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை கிராமத்தைச் சோ்ந்த கோட்டையாவின் மனைவி வள்ளி(23) மற்றும் அவரது இரு ஆண் மகன்களான பரத் (7), சந்தோஷ்(3) ஆகியோரின் சடலங்கள் தான் என தெரியவந்தது.

அதே பகுதியில் அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான வள்ளி, தனது கணவா் சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தனது இரு மகன்களுடன் தனியே வசித்து தொழில் செய்து வந்துள்ளாா். ஞாயிற்றுக்கிழமை வள்ளி, தனது இரு மகன்களுடன் அரக்கோணத்தில் இருந்து திருச்சானூா் சென்ற மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வறுமையின் காரணமாக வள்ளி தற்கொலை செய்துக்கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக மகன்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.