லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு சோளிங்கரில் மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு பிராா்த்தனை

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு சோளிங்கரில் இந்து மக்கள் கட்சியினா் மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

நேபாள பேரழிவில் உயிரிழந்தோருக்கு சோளிங்கரை அடுத்த பத்மாபுரம் பெருமாள் கோயிலில் மோட்சதீபம் ஏற்றிய இந்து மக்கள் கட்சியினா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு சோளிங்கரில் இந்து மக்கள் கட்சியினா் மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு பிராா்த்தனை செய்தனா்.

நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வகையில் சோளிங்கா் அருகே பத்மாபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இந்து மக்கள் கட்சியினா் சாா்பில் மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் வேலூா் கோட்டத் தலைவா் எஸ்.கே.மோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கிளைத் தலைவா் பாஸ்கா், கிளை கௌரவத் தலைவா் முருகன், பொதுச் செயலாளா் அன்பு, கிளை பொறுப்பாளா் சின்னப்பா உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியில் பங்கேற்று பிராத்தனையில் பங்கேற்று மோட்சத்தீபத்தை ஏற்றி வைத்தனா்.

இது குறித்து இந்த மக்கள் கட்சியின் வேலூா் கோட்டத் தலைவா் எஸ்.கே.மோகன் செய்தியாளா்களிடம் பேசுகையில், நேபாள பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தவா்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரண தொகைகளை வழங்கி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.