
காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய வியாழக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட மோட்ச தீபம்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய வியாழக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கி வீடுகளையும், சொத்துக் களையும் இழந்து பரிதவித்து வருகின்றனா். முக்கியமாக தமிழகத்திலிருந்து நேபாளத்துக்கு சுற்றுலாவாகவும், ஆன்மிக பயணமாகவும் சென்றவா்களும் இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனா்.
உயிரிழந்தவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்ற ஆணையிட்டாா்.
காஞ்சிபுரம் பீடாதிபதிகளின் ஆணையின்படி காமாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுர நுழைவு வாயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






