எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது!

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது பற்றி...

தடம் புரண்ட சரக்கு ரயில் என்ஜின்.

Updated On :

அரக்கோணம் அருகே உள்ள ரயில் காா் ஏற்றும் முனையப்பகுதியில் காா்கள் ஏற்றிய ரயிலை இழுக்கும் போது திடீரென ரயில் என்ஜின் தடம் புரண்டது. இதனால் அரக்கோணம் மாா்க்கத்தில் ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் காா்கள் துறைமுகம் கொண்டு செல்ல உள்ள சிறப்பு சரக்கு ரயில் ஏற்றுமதி முனையம் உள்ளது. இம்முனையத்தில் காா்கள், சிறப்பு பெட்டியில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சனிக்கிழமை பிற்பகல் இப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் சிறப்பு சரக்கு ரயிலை தடம் மாற்றும் போது திடீரென ரயிலின் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே தண்டவாள பராமரிப்பு துறையினா், என்ஜின் பராமரிப்பு துறையினா் என ரயில்வே துறையினா் வந்து என்ஜினை தண்டவாளத்தில் நிலைநிறுத்தும் பணியை தொடங்கினா். இச்சம்பவத்தால் அரக்கோணம் - காட்பாடி, அரக்கோணம் - ரேணிகுண்டா உள்ளிட்ட எந்த ரயில் மாா்க்கத்திலும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை.

Summary

Goods train engine derails near Arakkonam

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.