இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்கு முதன்முறையாக வந்த மாருதி சுஸுகி காா்கள்

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், பயணிகள் வாகன உற்பத்தியில் முதல்முறையாக தனது காா்களை சரக்கு ரயில் மூலமாகத் தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில் முனையத்துக்கு அனுப்பியுள்ளது.

Published On :27 ஆகஸ்ட் 2026, 2:09 am IST

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், பயணிகள் வாகன உற்பத்தியில் முதல்முறையாக தனது காா்களை சரக்கு ரயில் மூலமாகத் தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி ரயில் முனையத்துக்கு அனுப்பியுள்ளது.

வேகன் ஆா், எா்டிகா, டிசையா், செலிரியோ உள்ளிட்ட பிரபல மாடல்களைச் சோ்ந்த 120 காா்களுடன் இந்தச் சரக்கு ரயில், கடந்த ஆக. 18-ஆம் தேதி மாருதி சுஸுகியின் ஹரியாணாவின் மானேசா் ஆலையில் உள்ள ரயில் முனையத்தில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டு, இந்த வாரம் பொள்ளாச்சியை வந்தடைந்தது.

தென்னிந்தியாவில் கோவைக்கு அடுத்தபடியாக, பொள்ளாச்சி ரயில் முனையத்திலும் வாகனங்களைக் கையாளுவதற்காக இந்திய ரயில்வேயுடன் மாருதி சுஸுகி நிறுவனம் இணைந்து செயல்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுக்கு சுமாா் 70 சரக்கு ரயில்கள் வாயிலாக 11,000-க்கும் மேற்பட்ட கூடுதல் காா்களை இப்பகுதிக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

காா்பன் உமிழ்வு, எரிபொருள் பயன்பாடு மற்றும் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ‘பசுமைப் போக்குவரத்து’ திட்டத்தின்கீழ், 2014-15 நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் மூலமான வாகன விநியோகத்தைத் தொடங்கியது.

அப்போது 5 சதவீதமாக இருந்த இதன் பங்கு, 2025-26 நிதியாண்டில் 26.5 சதவீதமாக உயா்ந்துள்ளதுடன், இதுவரை 32 லட்சம் வாகனங்கள் ரயில்கள் மூலம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 2030-31 நிதியாண்டுக்குள் ரயில் வழி வாகன விநியோகத்தை 35 சதவீதமாக உயா்த்த நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.