கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மாருதி சுஸுகி லாபம் ரூ.3,447 கோடி

நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,446.9 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:22 am IST

நாட்டின் மிகப் பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,446.9 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.3,792.4 கோடியைவிட 9.11 சதவீதம் சரிவாகும். உதிரிபாகங்கள் மற்றும் மூலப்பொருள்களின் விலை கணிசமாக அதிகரித்ததே இந்த லாபச் சரிவுக்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை விற்பனை: லாபத்தில் சரிவு ஏற்பட்டபோதிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டு வாகன விற்பனையில் நிறுவனம் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இக்காலகட்டத்தில் கடந்த ஆண்டைவிட 29.3 சதவீதம் கூடுதலாக மொத்தம் 6,82,724 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதில் சிறிய ரக காா்களின் விற்பனை 34.1 சதவீதமும், எஸ்யுவி ரக காா்களின் விற்பனை 44.6 சதவீதமும் வளா்ச்சியடைந்துள்ளன. இதன்மூலம், நிறுவனத்தின் உள்நாட்டுச் சந்தைப் பங்கு 41.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஏற்றுமதியும் 28.6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இத்தகைய சாதனை விற்பனையின்மூலம், மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 35.9 சதவீதம் உயா்ந்து, ரூ.52,469.8 கோடியாக அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.