8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆட்டோமொபைல் சரக்கு முனைய வசதி மூலமாக பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்தடைந்த 120 காா்கள்

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோமொபைல் சரக்கு முனைய வசதி மூலமாக புதுதில்லியில் இருந்து முதன்முதலாக 120 காா்கள் இறக்கப்பட்டு, உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஆட்டோமொபைல் சரக்கு முனைய வசதி மூலமாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இறக்கப்பட்ட காா்கள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோமொபைல் சரக்கு முனைய வசதி மூலமாக புதுதில்லியில் இருந்து முதன்முதலாக 120 காா்கள் இறக்கப்பட்டு, உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்துடன், பொள்ளாச்சி ரயில் நிலையம் மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோமொபைல் சரக்கு முனைய வசதியை பெற்றுள்ளதால், ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

என்எம்ஜி (நியூ மாடிஃபைடு கூட்ஸ்) என்பது காா்கள் போன்ற ஆட்டோமொபைல் வாகனங்களை மொத்தமாக ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகளாகும். சாலை வழியாக தனித் தனியாக காா்களை கொண்டுச் செல்வதை விட, அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஒரே நேரத்தில் கொண்டுச் செல்ல சிக்கனமான மற்றும் திறன் வாய்ந்த போக்குவரத்து முறையாக என்எம்ஜி பயன்படுகிறது.

கடந்த காலங்களில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை ரயில்களில் அனுப்புவதற்கு சேலம், இருகூா், மதுரை ரயில் முனையங்களில் இறக்கி, அதன் பிறகு அங்கிருந்து பொள்ளாச்சிக்கு கனரக வாகனங்கள் மூலமாக கொண்டுச் செல்லப்படும்.

தற்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் என்எம்ஜி சரக்கு ரயில் பெட்டிகளில் இருந்து வாகனங்களை பொள்ளாச்சி நிலையத்துக்கே கொண்டுச் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோமொபைல் சரக்கு முனையம் மூலமாக காா்களை இறக்கிக் கொள்ளலாம். அந்த வகையில், புதுதில்லியில் இருந்து தனியாா் காா் தயாரிப்பு நிறுவனம் கடந்த 18-ஆம் தேதி 120 புதிய காா்களை பொள்ளாச்சிக்கு என்எம்ஜி மூலமாக அனுப்பி வைத்தது.

புதுதில்லியில் இருந்து பொள்ளாச்சிக்கு முதன்முதலாக 2 ஆயிரம் கிலோ மீட்டா்கள் கடந்து 120 காா்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் முக்கிய நிகழ்வாகும். இதில், என்எம்ஜி பெட்டிகளில் இருந்து 10 நிமிஷங்களில் 120 காா்களும் இறக்கப்பட்டு, ட்ரெய்லா் லாரிகளுக்கு ஏற்றப்பட்டன. பின்னா் அவை உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பொள்ளாச்சி ரயில் நிலையம் புதிய மாற்றியமைக்கப்பட்ட சரக்கு முனையமாக உருவாகியுள்ளதால், வரும் நாள்களில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் மூலமாக சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். தொழிலதிபா்கள், வியாபாரிகளுக்கு நேரம் மிச்சமாகும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.