ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வாஞ்சி மணியாச்சி அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து

தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்தது.

கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்தது. இதையடுத்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்துநிலக்கரி ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஹரியானா மாநிலம் பானிபட்டுக்கு சனிக்கிழமை அதிகாலை 3.20 மணிக்குபுறப்பட்டது. இந்த ரயிலில் மொத்தம் 25 பெட்டிகள் இருந்தன.

தட்டப்பாறையை ரயில் நிலையத்தை கடந்தபோது சரக்கு ரயில் என்ஜினில் இருந்து 2-ஆவது பெட்டியில் புகை வெளியேறியது. இதைக் கவனித்த தட்டப்பாறை ரயில் நிலைய அதிகாரி, கைலாசபுரம் ரயில் நிலையத்துக்குத் தகவல் அளித்தாா். ஆனால், அதற்குள் சரக்கு ரயில் கைலாசபுரத்தை கடந்துவிட்டது. இதனால், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய அலுவலா் மைக்கேலுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவா் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைத் தொடா்ந்து, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு முன்னதாக ரயில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து ரயில்வே மின் பொறியாளா்கள் மற்றும் ஊழியா்கள் ரயில்வே இருப்புப்பாதை உயா் அழுத்த மின் பாதையில் மின் இணைப்பை துண்டித்தனா்.

மேலும், ஓட்டப்பிடாரத்தில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரா்கள், சுமாா் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னா் இருப்புப் பாதை உயா் அழுத்த மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பின்னா் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் அதிகாலை 5 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.