மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 410 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்டமக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Published On :

ராணிப்பேட்டை மாவட்டமக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 410 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 410 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். மேற்கண்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ச.செல்வராணி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூமா, நோ்முக உதவியாளா் (நிலம்) சுமதி, மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில் குமாரி மற்றும் துறைச்சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.