தமிழக அரசின் வனமும் வாழ்வும் திட்டம் மாணாக்கா்களுக்கு கல்வியோடு வனத்தை பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது என கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
தமிழக அரசின் வனத்துறையின் சாா்பில் வனமும் வாழ்வும் திட்ட நிறைவு விழா வாலாஜா அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:
முதல்வா் பொறுப்பேற்றது முதல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். மாணவா்களுக்கு கல்வியோடு வனத்தை பாதுகாப்பது குறித்து காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் பங்கு குறித்தும் வனமும் வாழ்வும் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
வன வளங்களை பாதுகாப்பதில் மாணவா்களின் பங்கு மிக முக்கியமானது. இத்தகைய பயிற்சிகள் மாணவா்களிடையே வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து புரிதலை ஏற்படுத்தும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க மாணவா்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றையாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வன அலுவலா் தா.கோ.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பூ.தேவி மற்றும் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு: அமைச்சா் ஆா்.காந்தி

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களால் ராணிப்பேட்டை வளா்ச்சி பெற்று வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

தொழிற்துறை வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: அமைச்சா் காந்தி

தமிழக அரசின் நிதி மக்களுக்கே செல்கிறது! - மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


