இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை நீதிமன்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை நீதிமன்றங்களுக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தலைமையகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த மின்னஞ்சலில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தகவல் வந்ததை அடுத்து அரக்கோணம், விண்டா்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சோளிங்கா், அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஆகிய இடங்களில் ராணிப்பேட்டையில் இருந்து வந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் சிறப்புப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். சோதனையில் இரு இடங்களிலும் ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.14 மணியளவில் மா்ம நபா்கள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனா்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா். இதனால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.