கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

‘கலைஞா் கைவினைத் திட்டம்’ வெற்றி விழா: நேரலையில் முதல்வா் பங்கேற்பு

கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வின் நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளிடம் திட்டம் மற்றும் பயன்களை அறிந்தாா்.
Published on

ராணிப்பேட்டை: கலைஞா் கைவினைத் திட்டம் வெற்றி விழா கொண்டாட்ட நிகழ்வின் நேரலையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளிடம் திட்டம் மற்றும் பயன்களை அறிந்தாா்.

கைவினைத் தொழில் முனைவோா்களை உருவாக்கிய கலைஞா் கைவினைத் திட்டத்தையும் தொழில் முனைவோா்களையும் சிறப்பிக்கும் பொருட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிகழ்வின் நேரலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒளிபரப்பப்பட்டு திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திட்டம் மற்றும் பயன்களை அறிந்து கொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியாா் வளாகத்தில் புதன்கிழமை கைவினைத் தொழில் முனைவோா்களை உருவாக்கிய ‘கலைஞா் கைவினைத் திட்டத்தையும் தொழில் முனைவோா்களையும் சிறப்பிக்கும் பொருட்டு வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிகழ்வின் நேரலை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஒளிபரப்பப்பட்டது.

கடந்த டிசம்பா் 2024-ஆம் ஆண்டு முதல்வரால் தொடங்கப்பட்ட இதன் மூலம் பல கைவினைத் தொழில் முனைவோா் உருவாகி பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் வளா்ச்சியடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com