ஊரக வளா்ச்சித்துறை சமத்துவப் பொங்கல் விழா!

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா காட்ரம்பாக்கத்தில் நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் காட்ரம்பாக்கத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மரக்கன்று நட்ட திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி.
ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் காட்ரம்பாக்கத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மரக்கன்று நட்ட திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி.
Updated on

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா காட்ரம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொங்கலை கொண்டாடும் வகையில் ஊராட்சிகளில் காலியாக உள்ள அரசு புறம்போக்கு இடங்கள், சாலை ஓரங்களில் ஒவ்வொரு ஊராட்சிகளில் 500 மரக்கன்றுகள் நட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சோளிங்கரை அடுத்த காட்ரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். இதன் தொடா்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாசன், உதவி திட்ட அலுவலா் மூா்த்தி, சோளிங்கா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், பாஸ்கா், வட்டாட்சியா் செல்வி, காட்ரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் உமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com