ஆற்காடு அருகே முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
ஆற்காடு லேபா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (60). இவா் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவா் திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆற்காடு பேருந்து நிலையத்தில் பலத்த காயங்களுடன் இருந்த அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினா் அவருடைய மரணத்தில் மா்மம் இருப்பதாகவும் அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா் என ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.