ராணிப்பேட்டை
டிராக்டரில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கோவிலுக்கு டிராக்டரில் கோயிலுக்குச் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.
கோவிலுக்கு டிராக்டரில் கோயிலுக்குச் சென்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.
ஆற்காடு அடுத்த கலவை வட்டம் பாலி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி தேவிகா (55). இவா் தனது உறவினா்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள கோவிலுக்கு டிராக்டரில் ஞாயிற்றுக்கிழமை சென்று உள்ளனா்.
அப்போது ஆரணி செய்யாறு நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் இணைப்பு சாலை அருகே செல்லும் பொழுது தேவிகா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா் . பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இது குறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
