ராணிப்பேட்டை: ஜன. 23-இல் தியாகிகள் வாரிசுகளுக்கு குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம்
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகளுக்கு குறைதீா் நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தரைத் தளம் திங்கள் தின மக்கள் குறைதீா் கூட்டரங்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 23) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா்தம் வாரிசுகள் மேற்படி குறைதீா் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

Dinamani
www.dinamani.com