குடியரசு தின கிராம சபைக் கூட்டங்கள்: ராணிப்பேட்டை ஆட்சியா் அறிவிப்பு

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

இதையொட்டி அனைத்து கிராமஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும். ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளா் வரவு செலவு திட்டம், தொழிலாளா் வரவு செலவு திட்ட பணிகள்,நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க(ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறு பாசன ஏரிகள் புதுபித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

Dinamani
www.dinamani.com