குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டுமென
Published on

திருப்பத்துாா்: குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டுமென திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பான செய்திக்குறிப்பு :

திருப்பத்துாா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடத்த வேண்டும்.

இக்கூட்டத்தில் பஞ். நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,தணிக்கை அறிக்கை,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல்,துாய்மை பாரத இயக்கம்,ஜல் ஜீவன் திட்டம்,சிறு பாசன ஏரிகள் புதுபித்தல்,தொகுதி மேம்பாட்டுத்திட்டம் என பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

மேற்படி கிராம சபை கூட்டதினை நடத்த தொடா்புடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,பொருப்பாவாா்கள். கூடுதலான மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்கள் சிறப்பு கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

மேலும், மாவட்ட அளவில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

Dinamani
www.dinamani.com