சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

Published on

சோளிங்கா் அருகே சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சோளிங்கரை அடுத்த ஐய்ப்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் (70). இவருக்கு இரு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனா். புதன்கிழமை காலை நரசிம்மன், தனது விவசாய நிலத்துக்கு விவசாயப் பணிகளை மேற்கொள்ள சென்றுள்ளாா். அங்கு சென்ற நரசிம்மனின் மூத்த மகனான செல்வம் (40) தனக்குச் சேர வேண்டிய சொத்துகளை தனக்கு தரும்படி தந்தை நரசிம்மனிடம் கேட்டுள்ளாா்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் நரசிம்மனை, செல்வம் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், நரசிம்மன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா். இதையறிந்த அங்கிருந்தோா் அவரை பாா்த்தபோது அவா் உயிரிழந்து விட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த சோளிங்கா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நரசிம்மனின் சடலத்தை மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இது குறித்து வழக்குப் பதிந்து நரசிம்மனின் மகன் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com