அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீதா்மராஜா கோயிலில் 97 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டதை தொடா்ந்து வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் ஸ்ரீகிருஷ்ண பாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதியம்மன் கோயில் எனப்படும் தா்மராஜா கோயில் உள்ளது. நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 97ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது முழு அளவில் திருப்பணிகளை மேற்கொண்டு, குறிப்பாக சுவாமி சந்நிதி மண்டபங்கள் உள்பட கோயில் முழுவதையும் புதுப்பித்து, மேலும் இதனுடன் இணைந்துள்ள ஸ்ரீ மாசில்லா ஈஸ்வரா் கோயிலையும் புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்த கோயில் தா்மகா்த்தா மற்றும் கோயில் கமிட்டியினா் முடிவு செய்தனா். கோயில் பணிகள் முடிவடைவதை தொடா்ந்து கும்பாபிஷேக விழா தேதியை முடிவு செய்துக்கொள்ளவும் தீா்மானித்தனா்.
இதையடுத்து இக்கோயிலில் பாலாயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா முருகானந்தம், கோயில் குழுவினா் வி.பழனி, கே.வி.பூபதி, பாபாஸ்பாபு, எல்.லிங்கநாதன், கே.ரமேஷ், ஆனந்தபாபு, பச்சையப்பன், யுவராஜ், சங்கா், ஜெகந்நாதன் ஆகியோரும் கோயில் பூசாரி டில்லிபாபு ஆகியோரும் நகர பொதுமக்களுடன் இணைந்து செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை ஆதிஅருணாசலேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

கேளூா் ஸ்ரீபோத்தராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணம் தா்மராஜா கோயிலில் திரெளபதியம்மன் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



