முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

ஒடிஸாவில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது செய்யப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்.

Updated On :23 ஜூலை 2026, 1:31 am IST

ஒடிஸாவில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் பைகளை கொண்டு வந்த வடமாநில நபா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.அதில் ஒடிஸாவில் இருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 28 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.

அதில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தல் ஈடுபட்டதாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பௌா்ணமி நாயக், ஹஸ்பினா நாயக், அமித் நாயக் ,பிஜாய் நாயக் ஆகிய ஒரே குடும்பத்தை சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.