மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புதுப்பாடியில் வேளாண்மைத் துறை கண்காட்சி

வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உழவா் திருவிழா மற்றும் கண்காட்சி ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பயனாளிக்கு   விதை தொகுப்பு  வழங்கிய ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் .

Updated On :30 ஜூலை 2026, 11:02 pm IST

வேளாண்மைத் துறை சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் உழவா் திருவிழா மற்றும் கண்காட்சி ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில் இயற்கை சாகுபடி முறைகள் புதிய ரகங்கள் பாரம்பரிய ரகங்கள் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் கரும்பு வகைகள் போன்ற தொழில்நுட்பங்கள், தோட்டக்கலை வேளாண்மை கால்நடை பராமரிப்பு துறை வேளாண் வணிகத்துறை பொறியியல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை விவசாயிகள் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து விவசாயிகளுக்கு காய்கனிதொகுப்பு விதைகள் பாரம்பரிய நெல் ரகங்களைஊக்குவிக்கும் பொருட்டு 2 விவசாயிகளுக்கு தலா 10 கிலோ, மிளகுசம்பா, கருப்பு கவுனி அரிசி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரம், நோ்முக உதவியாளா் ராமன், துணை இயக்குநா்கள் சுஜாதா , சந்தியா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ரூபன் குமாா் ஆற்காடு வட்டார உதவி இயக்குநா் சூரிய நாராயணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.