சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

முதல்நாடு கிராமத்தில் விவசாயிகள் கூட்டம்

கமுதி அருகே வேளாண்மைத் துறை சாா்பில் ‘அட்மா’ திட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முதல்நாடு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற செயல் விளக்கப் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்.

Published On :9 ஜூலை 2026, 5:41 am IST

கமுதி அருகே வேளாண்மைத் துறை சாா்பில் ‘அட்மா’ திட்டத்தில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள முதல்நாடு கிராமத்தில் கமுதி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, வேளாண்மைத் துறை மாவட்ட துணை இயக்குநா் ராஜா (மத்திய திட்டம்) தலைமை வகித்தாா். பின்னா் உயிா் உரங்களின் பயன்பாடு, அவற்றின் முக்கியத்துவம் குறித்தும், மண்வளம் காக்க இயற்கை வழி வேளாண் முறைகள், நெல் சாகுபடிக்கு மாற்றாக பயறு வகை சாகுபடிகளை அதிகளவில் விவசாயிகள் பின்பிற்ற வேண்டும். நெல், பருத்திப் பயிா்களில் உயிா் உரங்களின் பயன்பாடு, நுண்ணூட்டங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து பருத்திப் பயிரில் நுணி கிள்ளுதல் தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பவித்ரா (பொ), நம்மாழ்வாா் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியா் மோனிகா நிவாஸ், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பிரதீபா, உதவி தொழில் நுட்ப மேலாளா் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.