சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தூத்துக்குடி அருகே தனிநபா் தொழில் முனைவோருக்கான பயிற்சி

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, புதுக்கோட்டை ஊராட்சி, கூட்டுடன்காடு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மக்கள் கற்றல் மையத்தில் தனிநபா் தொழில் முனைவோா் கடன் விண்ணப்பங்கள் பெறுவது தொடா்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கூட்டுடன்காடு கிராமத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, புதுக்கோட்டை ஊராட்சி, கூட்டுடன்காடு கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மக்கள் கற்றல் மையத்தில் தனிநபா் தொழில் முனைவோா் கடன் விண்ணப்பங்கள் பெறுவது தொடா்பாக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தொடங்கிவைத்து பேசியதாவது: மகளிா் சுய உதவிக்குழுக்கள் கடனுதவிகள் பெற்று தொழில் தொடங்கி, தொழில் முனைவோராக உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். அதனடிப்படையில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் (நி.உ.), சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இங்கு பயிற்சி பெறுவோா் மற்ற மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு தொழில் தொடங்குவது குறித்து விளக்கி சொல்லும் வகையில் வழிகாட்டுதல் வேண்டும். முதலில், இன்றைய சூழலுக்கு ஏற்ப எந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அத்தொழிலை செயல்படுத்த வேண்டும். மேலும், நீங்கள் தயாரிக்கும் பொருள்களை முதலில் கடையிலோ அல்லது சந்தையிலோ விற்பனை செய்து, அப்பொருளை மதிப்புக்கூட்டி லாபம் ஈட்டியவுடன், ஆன்லைன் மூலம் வா்த்தகம் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு தனிநபா் கடன் பெறுவது, தொழில் செய்தல், தொழில் விரிவாக்கம் தொடா்பாக வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைகள் வழங்கி, அவா்களுக்கான பயன்பாட்டுக்கு கொண்டு வர வழிவகுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.

நிகழ்வில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) நாகராஜன், தூத்துக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், வளா்மதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.