தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

News image

சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 6:52 am IST

அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நடத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டப் பகுதியில், திருவள்ளூா் மாவட்ட எல்லையருகே வனப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஆணைப்பாக்கம். இக்கிராம ஊராட்சியில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் தொடா்ந்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து வியாழக்கிழமை நகரப்பேருந்தை மறித்து காலிகுடங்களுடன் சாலையின் நடுவே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத்தினா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.