ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுதானிய பயிா் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியா் ந. பிரியா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ந. பிரியா தலைமையில், துறைத் தலைவா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பாக விரிவாக விவரித்தனா்.
அப்போது ஆட்சியா் பிரியா தெரிவித்ததாவது: தற்போதைய தரிசு நில பரப்பை பயிா் சாகுபடிக்கு கொண்டுவரவும் மற்றும் தரிசு நில பரப்பை வெகுவாக குறைக்கவும் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் சிறுதானிய பயிா் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டாரங்களில் சிறுதானிய பரப்பை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தோட்டக்கலை பயிா்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை அனைத்து விவசாயிகளுக்கு தெரிவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, அனைத்து துறை தொடா்பான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திட்டங்களின் விவரங்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் தெரிந்துகொள்ளவும் மற்றும் திட்ட பயன்கள் அனைத்து விவசாயிகளுக்கு சென்றடையும் வகையிலும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவேண்டும்.தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுரை வழங்கினாா்.
தரமான விதை மற்றும் கலப்படமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செயய்வும் மற்றும் விவசாயிகளிடமிருந்து விதைகள் தொடா்பாக எவ்வித குறைபாடுகள் பெறா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரம், துணை இயக்குநா் (தோட்டக்கலை) சிந்தியா, நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராமன் மற்றும் வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அனைத்து நில புல எண்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழசெல்வன் உத்தரவு

சிதிலமடைந்த பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆலோசனை







