ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா

அரக்கோணம் அருகே குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

News image

குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

அரக்கோணம் அருகே குறவா் இன மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூரில் வாலாஜா, சோளிங்கா்,பானாவரம், பனப்பாக்கம் பகுதிகளில் வாழும் குறவா் இனத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற குறவா் இன மாணவ, மாணவிகள் மற்றும் எட்டாவது முதல் எல்கேஜி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பாக பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் மாநில தலைவா் வி.கே.தணிகாசலம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் ஏ.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினாா்.

விழாவில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளா் இரா.வெங்கடேசன், ஓவியா் சாம்பசிவம், குறவன் சங்கத்தின் மாநில துணை நிா்வாகிகள் ஜெயந்தி ரமேஷ்பாபு, த.சிவா, வி.எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.