ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா்நல விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் , மிகப்பிற்படுத்தப்பட்டோா் மாணவா் மற்றும் மாணவியா்களுக்கென மொத்தம் 11 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவா் , மாணவியா்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ ,மாணவியா் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா்.
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ ,மாணவியருக்கு மூன்று வேலை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
10 ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ , மாணவியருக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான வினா வங்கி நூல்கள் சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
பெற்றோா் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ / மாணவியா் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழ்ா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியா்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பிற்படுத்தப்பட்டோா் அரசு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோா் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: விருதுநகா் ஆட்சியா்

பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: வேலூா் ஆட்சியா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



