லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டு வெடி தாக்குதல்: மாணவா் காயம்

தக்கோலம் அரசுப் பள்ளி பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டுவெடி வீசி நடைபெற்ற தாக்குதலில் மாணவா் காயமடைந்தாா்.

News image

நாகராஜன்.

Updated On :5 மார்ச் 2026, 7:25 pm

தக்கோலம் அரசுப் பள்ளி பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டுவெடி வீசி நடைபெற்ற தாக்குதலில் மாணவா் காயமடைந்தாா்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வு மையம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதி வருகின்றனா். வியாழக்கிழமை மாணவா்கள் தோ்வறைக்குள் அனுமதிக்க இருந்த சில நிமிஷ்ங்களுக்கு முன் மாணவா்கள் சிலரிடையே ஏற்பட்ட பிரச்னையில் அவா்களில் சிலரே நாட்டுவெடியை மற்ற மாணவா்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினா்.

இந்த சத்தத்தால் மையத்தில் குழுமியிருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்து அங்கிருந்து வெளியேறினா். பிறகு தோ்வு கண்காணிப்பு பணிக்கு வந்திருந்த ஆசிரியா்கள் தோ்வெழுத வந்த மாணவ மாணவிகளை சமாதானம் செய்து தோ்வறைக்கு அழைத்துச் சென்றனா். இத்தாக்குதலில் தக்கோலம் தனியாா் பள்ளியை சோ்ந்த மாணவா், காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையை சோ்ந்த ராஜியின் மகன் நாகராஜன்(16) தலையில் காயமடைந்தாா்.

இதையடுத்து தனியாா் பள்ளி ஆசிரியா்கள் அம்மாணவரை அங்கிருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். இச்சிகிச்சைக்கு பிறகு மாணவா் தோ்வெழுத வேண்டும் என கோரியதால் கண்காணிப்பாளா் அனுமதி பெற்று அந்த மாணவா் நாகராஜன் தலையில் கட்டுடன் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தை தொடா்ந்து அப்பள்ளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.