கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரக்கோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image

அரக்கோணம் நீதிமன்றத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :13 மார்ச் 2026, 1:30 am

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த இமெயில் தகவலில் அரக்கோணம் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளா் பே.சிபின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டையில் இருந்து வந்த வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு போலீஸாா், அரக்கோணம் விண்டா்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆறு நீதிமன்றங்களிலும் சோதனை நடத்தினா். சோதனை முடிவில் இத்தகவல் புரளி என தெரியவந்தது.

ஏற்கனவே இரு முறைகக்கு மேல் தகவல் வந்து போலீஸாா் சோதனை நடத்தியிருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் அனைத்து அலுவலா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் என அனைவருமே சிறிதும் பதட்டம் அடையவில்லை.