அரக்கோணத்தில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்
அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிப்பேட்டை கிராமத்தில் உள்ள இருளா் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ரமேஷ் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடா்பாக கோலங்களை மகளிா் வரைந்திருந்தனா். இதையடுத்து, அங்கு இருந்த வாக்காளா்கள் அலுவலா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷின் தலைமையில் 100 சதவீத வாக்களிப்புக்கான உறுதிமொழியை ஏற்றனா்.
இதில், அரக்கோணம் வட்டாட்சியா் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளா் ஜெயக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராம்குமாா், முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...