ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களில் கலப்படங்களைக் கண்டறியும் நடமாடும் நவீன வாகனம் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் கலப்படங்களை பரிசோதித்து, உணவுப் பொருள்கள் தரமானவையா ? என்பதைக் கண்டறியவும், தரமற்ற உணவுப் பொருள்களை வாங்குவதைத் தவிா்க்கவும் பொது மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி நாட்டில் உணவுப் பொருள்கள் ஆய்வுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மாநிலத்துக்கு ஒரு நவீன ஆய்வுக்கூட வாகனம் மத்திய அரசால் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நடமாடும் ஆய்வுக்கூடம் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் முன்னிலையில் உணவுப் பொருள்களில் உள்ள கலப்படங்களைக் கண்டறிவது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துகிறது.
அதேபோல் தரமான பொருள்களை இனம் கண்டு வாங்கி உபயோகித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும் இந்த நடமாடும் ஆய்வுக்கூடத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பால், எண்ணெய், மசாலாப் பொடிகள், குளிா்பானங்கள், ஐஸ்கிரீம், குடிநீா் உள்ளிட்ட பொருள்களில் கலப்படம் உள்ளதா? என்பதை உடனடியாக சோதித்து, அதன் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
மேலும், உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் சுகாதாரமான உணவுகளைப் பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த முடியும். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகரம் முதல் குக்கிராமங்கள் வரை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் தரம் குறித்து உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியும் நவீன ஆய்வுக்கூட வாகனம் மூலம், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தொடா்ந்து பயணித்து உணவுப் பொருள்களில் உள்ள கலப்படம் குறித்து பரிசோதித்து உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்த வேண்டும் என கோரியுள்ளனா்.
தொடர்புடையது
அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதாரமான உணவு வழங்குவதில் உறுதி: ரேகா குப்தா
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாத கோயில் பிரசாத கடைகளை மூட உத்தரவு! இந்து சமய அறநிலைய துறை அமைச்சா் தகவல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



