தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப்படையினா் அரக்கோணத்தில் இருந்து புதன்கிழமை கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.
கேரள மாநிலத்தில் வரும் 26-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள மாநில பேரிடா் மீட்புப்படையினா் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தை தொடா்புக் கொண்டு தங்களது மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு படையினரை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து தலா 30 பேரை கொண்ட 8 குழுக்கள் ஆக மொத்தம் 240 போ் புதன்கிழமை சாலை மாா்க்கமாக தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தளத்தில் இருந்து கேரளத்துக்கு புறப்பட்டுச் சென்றனா். இக்குழுவினா் கேரள மாநிலத்தின் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி, எா்ணாகுளம், திருச்சூா், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.
இக்குழுவினா் தங்களுடன் அனைத்து மீட்பு நவீன உபகரணங்களுடன் புறப்பட்டுச்சென்றனா். இதையடுத்து தக்கோலம் படைத்தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தென்மேற்குப் பருவமழை: கேரளம் விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை!

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து
ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

மின் நுகர்வு- சவாலும் தீர்வும்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



