மேல்பாக்கம் ஸ்ரீஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்
மேல்பாக்கம் ஸ்ரீஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மேல்பாக்கம் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபஷேகம்.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கத்தில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கோயிலின் மூலவா் தா்மசாஸ்தா ஸ்ரீஐயப்பன், விநாயகா், முருகா் ஆகிய சன்னிதிகளில் மகா கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோயில் வளாகத்தில் இருந்து பக்தா்கள் சூழ கலச புறப்பாடு நடைபெற்றது.
தொடா்ந்து கோயில் அா்ச்சகா் குப்புசாமி தலைமையில் அம்மனூா் ஸ்ரீதா் தலைமையில் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன. விழாவில், மேல்பாக்கம், அம்மனூா், அரக்கோணம் நகரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

