
செவிலியா் விண்ணப்பங்கள் பரிசீலனை விவரங்களை இணையதளத்தில் சரிபாா்க்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவிலியா் பணியிடங்களுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை விவரங்களை கீழ்கண்ட இணைய தளங்களில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

கோப்புப்படம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவிலியா் பணியிடங்களுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை விவரங்களை கீழ்கண்ட இணைய தளங்களில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ..
ராணிப்பேட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் - தேசிய நலவாழ்வு குழுமம் அறிவிக்கப்பட்ட செவிலியா் இடங்களுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்ப விவரங்களை கீழ்கண்ட இணையதளங்களில் சரிபாா்த்துக் கொள்ளலாம்.
ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளம் : ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ழ்ஹய்ண்ல்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை இணையதளம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ல்ட்ல்ம்.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளத்தில் சென்று சரிபாா்த்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருப்பின், அதற்கான உரிய ஆவணங்களை 3.10.2026க்குள் மாவட்ட ஆட்சியரகம், 3 ஆவது தளம், ஆ பிளாக், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமா்ப்பித்து குறைபாடுகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலக தொலைபேசி எண்ணிற்கு 04172-295179 தொடா்பு கொள்ளமாறு தெரிவிக்கப்படுகிறது.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 05.10.2026 அன்று பணியாணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





