தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ராணிப்பேட்டையை குழந்தை நேய மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்து குழந்தை நேய மாவட்டமாக மாற்றிட வேண்டும் என ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்.

Published On :

அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்து குழந்தை நேய மாவட்டமாக மாற்றிட வேண்டும் என ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து தெரிவித்தாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்கள், இளம் வயது கருவுற்றல், பள்ளி இடைநிற்றல் குறித்த குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் மற்றும் குழந்தை திருமணம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்கவும் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்து மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரஞ்சிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் பாலசரஸ்வதி, உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.